முகக் கவசம் அணியாது சமூக இடைவெளி பேணாது, ஊரடங்கு சட்டத்தை மீறிய 260 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

முகக் கவசம் அணியாது சமூக இடைவெளி பேணாது, ஊரடங்கு சட்டத்தை மீறிய 260 பேர் கைது

முகக் கவசம் அணியாதவர்கள் 39 பேர் மற்றும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி பேணல் ஆகியன உள்ளடங்கிய வர்த்தமானி அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் செயற்படுபவர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதன்படி, சமூக இடைவெளி பேணல் மற்றும் முகக் கவசம் அணிதல் ஆகிய அறிவுறுத்தல்களைப் பின்பற்றத்தவறிய 39 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர்கள் பெரும்பாலும் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment