கடலில் குளிக்கச் சென்று மாயமான இளைஞர்கள் - தேடும் பணி தீவிரம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 3, 2020

கடலில் குளிக்கச் சென்று மாயமான இளைஞர்கள் - தேடும் பணி தீவிரம்

நீர்கொழும்பு கடலில் குளிக்கச் சென்று நேற்று (03) மாலை காணாமல் போன இளைஞர்களில் இருவர் தலவாக்லை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை, ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்த முத்துகுமார் சிந்துஜன் (வயது 24) மனோகரன் சசிகுமார் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் கொழும்பில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் நேற்று (03) மாலை குளிப்பதற்காக தனது 7 நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலுக்கு சென்றுள்ளனர். 

இந்நிலையில் தீடீரென அலைக்கு சிக்குண்டு கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போய்யுள்ளனர். காணமல் போன இளைஞர்கள் மூவரில் மற்றும் ஒருவர் பதுளை, நமுனுகல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனவர்களை தேடும் பணிகளை நேற்று மாலை கடற்படையினரும் சுழியோடிகளும் முன்னெடுத்து வருகின்றனர். இது குறித்து மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment