உத்தரப் பிரதேச ஹத்ராவில் இளம் பெண் வன்கொடுமையை கண்டித்து நாளை கனிமொழி தலைமையில் தி.மு.க. மகளிர் அணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்கிறது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்தும், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கக் கோரி கனிமொழி எம்.பி. தலைமையில் நாளை மாலை தி.மு.க. மகளிர் அணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்கிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment