கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி பாராளுமன்றத்திற்கு பொருந்தாது - சுகாதார அமைச்சர் பவித்ரா - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி பாராளுமன்றத்திற்கு பொருந்தாது - சுகாதார அமைச்சர் பவித்ரா

கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியின் படி பாராளுமன்றம் ஒரு பொது இடமாக கருதப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா சட்டம் பாராளுமன்றத்தைத் தவிர்ந்த வெளிப்புற இடங்களுக்கு மாத்திரம் பொருந்தும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பாராளுமன்றத்திற்கு பொருந்தாது என்பதால் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர முடியும் என குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும், பாராளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி தாக்கத்தை செலுத்தாது என கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைச் சபையில் வெளிப்படுத்த விரும்பினால் முகக் கவசம் அணியாமல் தங்களின் கருத்துக்களை முன்வைக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பாராளுமன்றத்தில் முகக் கவசம் அணிவது அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு நபர்களிடையே சமூக இடைவெளியை பேணுவது மற்றும் முகக் கவசம் அணிவது போன்ற சுகாதார சட்டம் பாராளுமன்றத்திற்குப் பொருந்தாது என அவர் தெரிவித்தார்.

மேலும் வர்த்தமானியின் சில உட்பிரிவுகள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தும் என்று சுகாதார அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

பொய்யான கதைகளின் மூலம் பொதுமக்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாகவும் சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டினார்.

கொரோனா கட்டுப்பாடுகளை முன்வைத்து 20 ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தினை ஒத்திவைக்க எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment