கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா : 11பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா : 11பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாவது, “கொழும்பு கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு, பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பி.சி.ஆர்.பரிசோதனை முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால், அவருடன் பணிபுரிந்த ஏனைய 11 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருடன் தொடர்புகளை பேணியவர்களை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment