அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் இன்று (27) அனுமதியளித்தார்.
கடந்த 18 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் ஆறு தினங்களாக தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு வைத்தியர், ஒரு பிரபல ஆசிரியர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு இன்று 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே அறுவரையும் பிணையில் செல்ல நீதிவான் அனுமதியளித்தார்.
குறித்த ஆறு சந்தேக நபர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான காலிங்க இந்தாதிஸ்ஸ, தவராசா, அனில் சில்வா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆகியோர் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment