நாட்டில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கைமைய நாளை (திங்கட்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரை நாட்டில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கம்பஹா - திவுலபிடிய பகுதியில் வசித்து வரும் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment