உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கைது செய்ய வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா எம்.பி தெரிவித்துள்ளார்.
கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், இந்த தாக்குதலுக்கான முழுப்பொறுப்பை இவர்கள் இருவரும்தான் ஏற்க வேண்டும்.
அமைச்சரவையில் உள்ளவர்களுக்கு இதில் தலையீடு செய்ய முடியாது. அவர்கள் இருவரும்தான் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
பாதுகாப்பு தொடர்பில் பலவீனம் காணப்பட்டிருந்தால் இவர்களுக்கு அதிலிருந்து தப்ப முடியாது. நாட்டின் பாதுகாப்பில் அனைவருக்கும் தலையீடு செய்ய முடியாது.
அமைச்சரவையில் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்களுக்கு பாதுகாப்பு குறித்து பேச முடியும். எனக்கு வன வள அமைச்சுதான் வழங்கப்பட்டது. தனிப்பட்ட ரீதியில் பாதுகாப்புடன் தொடர்புள்ளவர்களுடன் பேசினாலும் உத்தியோகபூர்வமாக பேச முடியாது.
ஆனால் நாம் கூறியவற்றை அவர்கள் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் உருவானார்கள். கட்டாயமாக முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment