கம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடரும், நீக்க தீர்மானம் எடுக்கவில்லை - பொருட்கள் கொள்வனவுக்காக மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Monday, October 26, 2020

கம்பஹாவில் ஊரடங்கு சட்டம் தொடரும், நீக்க தீர்மானம் எடுக்கவில்லை - பொருட்கள் கொள்வனவுக்காக மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்

கம்பஹா மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று நீக்கப்படும் என வெளிவரும் தகவல்களில் எந்தவித உண்மையும் கிடையாது என இராணுவப் பேச்சாளர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் மூன்று தினங்களுக்கு மேல் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவித்த இராணுவத்தளபதி கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை இன்று 26ம் திகதி நீக்குவதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. அம்மாவட்டத்தில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

எனினும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் நேற்றுக் காலை கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment