உடன் அமுலுக்கு வரும் வகையில் களுத்துறை மாவட்டத்திலுள்ள அகலவத்தை மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மறு அறிவித்தல் வரை குறித்த உத்தரவு அமுலில் இருக்கும் என, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் செயற்பாட்டு மையத்தினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
அகலவத்தை பிரதேச செயலகம்
கொரக்கொட
பேரகம
தாபிலிகொட
கெகுலந்தலந்தல வடக்கு
பாலிந்தநுவர பிரதேச செயலகம்
பெல்லன
ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment