கொழும்பு மாவட்டத்தில் மேலும் மூன்று பொலிஸ் பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மொரட்டுவ, பாணந்துறை மற்றும் ஹோமாகம பொலிஸ் பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலிலுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்தின் 37 பொலிஸ் பிரிவுகளிலும் குளியாப்பிட்டியவில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டி, கொத்தட்டுவ, முல்லேரியா மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment