இலங்கையில் கொரோனா தொற்றானது இன்னும் கொத்தணி பரவல் நிலையிலேயே உள்ளது எனத் தெரிவித்துள்ள தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர, அது இன்னும் சமூக பரவல் நிலையை எட்டவில்லை என்றும் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சக வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்தப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
புதிய கொரானா தொற்றாளர்கள் பெரும்பாலானோர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்களாக இருக்கினறார்கள். எனவே கொரோனா பரவலானது இன்னும் சமூக பரவல் மட்டத்தை எட்டவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment