அமேசன் ஊழியர்கள் இருபதாயிரம் பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Saturday, October 3, 2020

அமேசன் ஊழியர்கள் இருபதாயிரம் பேருக்கு கொரோனா

அமேசன் ஊழியர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இ காமர்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் உலகின் முன்னணி நிறுவனமான அமேசனில் ஏறத்தாழ 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமேசன் நிறுவனம், கொரோனா உறுதி செய்யப்படும் ஊழியர்களின் விவரங்களை அளிப்பது தொடர்பாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, அமேசன் நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. 

நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் ஊழியர்கள் என்ற வீதத்தில் பரிசோதனை செய்ததாகவும் இதில் எதிர்பார்த்ததை விட குறைவாகவே தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமேசன் விளக்கம் அளித்துள்ளது.

No comments:

Post a Comment