ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தியமை நியாயமற்றது - பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தார் சட்டமா அதிபர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 13, 2020

ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்தியமை நியாயமற்றது - பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தார் சட்டமா அதிபர்

ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிற அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரியாஜ் பதியூதீன் மீதான விசாரணை ஆவணங்களை இதன்போது அவர் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான நிறுத்தப்பட்ட விசாரணைகளில் காணப்பட்ட குறைபாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, ரியாஜ் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நிறுத்தியமை நியாயமற்றது என சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment