ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா, டெங்கைக் கட்டுப்படுத்த விஷேட வேலைத்திட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா, டெங்கைக் கட்டுப்படுத்த விஷேட வேலைத்திட்டம்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேச செயலகமும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பட்டதாரி பயிலுனர்களை இணைத்து வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கும் கூட்டம் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் ஆகியோர் வழிகாட்டலில் உதவித் திட்டப்பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பட்டதாரி பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, கொரோனா தொற்று மற்றும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து குழுக்கள் அமைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள அரச திணைக்களங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment