வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் இதுவரை 2078 நபர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் இதுவரை 2078 நபர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்

எஸ்.எம்.எம்.முர்ஷித் 

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று (30) வெள்ளிக்கிழமை மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் வெள்ளிக்கிழமை வரை 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 2078 நபர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1675 நபர்களும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 283 நபர்களும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி 120 நபர்களும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் தனிமைப்படுத்தும் செயற்பாடு அதிகரிக்கலாமென சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரிப் பகுதியில் ஒருவரும், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒருவருமாக இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இனங்காணப்பட்டவர் பேலியகொட மீன் சந்தை கொத்தனியுடன் தொடர்புடையவர் எனவும், மாவடிமுன்மாரியைச் சேர்ந்தவர் கொழும்பிலிருந்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் முப்பது பேரும், ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் ஒருவருக்கும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியபோரதீவு, பட்டாபுரம் பிரதேசத்தில் ஒருவருக்கும், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் ஒருவருக்குமாக கொரோனா தொற்றுக்கு கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் 33 கொரோனா தொற்றாளர்கள் நேற்று வரை இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை வெள்ளிக்கிமையுடன் ஆறு நாட்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையினைக் கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது.

No comments:

Post a Comment