யாழிற்கு வருவோர் கட்டாய சுயதனிமைப்படுத்தப்படுவர் - மாநகர முதல்வர் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

யாழிற்கு வருவோர் கட்டாய சுயதனிமைப்படுத்தப்படுவர் - மாநகர முதல்வர்

யாழ்ப்பாண நகரத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார்

யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்த பகுதியை முடக்குவதற்கான செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருடன் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் குறித்த மாநகர பகுதியில் தொற்று ஏற்படாவண்ணம் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக ஆராயும் படிஆளுநர் பணித்தமைக்கு அமைய குறித்த நடைமுறை இன்றிலிருந்து பின்பற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment