வேயங்கொட பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு - மீறினால் சிறைத் தண்டனை அல்லது அபராதம் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 4, 2020

வேயங்கொட பொலிஸ் பிரிவிற்கும் ஊரடங்கு சட்டம் பிறப்பிப்பு - மீறினால் சிறைத் தண்டனை அல்லது அபராதம்

கம்பஹா மாவட்டத்தின் வேயங்கொட பொலிஸ் பிரிவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வேயாங்கொடை பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என இராணுவப் பேச்சாளர் லெப்டினன் ஜேனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திவுலபிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய பொலிஸ் பிரவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு செல்லவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்கள், தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கேற்ப செயற்பட வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

எவரேனும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில், சந்தேக நபருக்கு சிறைத் தண்டனை விதிப்பதற்கோ அல்லது அபராதம் விதிப்பதற்கோ சட்டத்தில் இடமுண்டு என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment