அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மனு சட்டவிரோதமானது என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனால் அவருக்கு எதிரான வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை வர்த்தக அமைச்சராக கடமையாற்றிய போது, சதொச நிறுவனத்தின் 153 ஊழியர்களை நீக்கி அவர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படுத்தியமையின் ஊடாக, அரசாங்கத்திற்கு நான்கரை கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்து முன்னைய அரசாங்க காலப்பகுதியில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் அவர்கள் அடிப்படை எதிர்ப்பு மனுக்களை முன்வைத்த போதும் அதனை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்த நிலையில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதற்கு எதிராக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அவரின் எதிர்ப்பு மனுவை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா படபெந்தி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு சட்டவிரோதமானது என தீர்ப்பளித்தார்.
அதன்படி, இந்த வழக்கில் இருந்து ஜோன்டன் பெர்னாண்டோவை விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதுடன், இந்த தீர்ப்பு குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment