இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சத்தியலிங்கம் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 2, 2020

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக சத்தியலிங்கம் நியமனம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து பொதுச் செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக கட்சி மட்டத்தில் பொதுச் செயலாளர் ஒருவரை நியமிக்கும் பொருட்டு துணைத் தலைவர்களாக செயற்பட்டு வந்த வைத்திய கலாநிதி ப. சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச் செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை கூடும் வரையிலும் துணைத் தலைவராக செயற்பட்டு வந்த ப. சத்தியலிங்கம் பொதுச் செயலாளராக செயற்படும் வகையில் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வைத்திய கலாநிதியுமான ப. சத்தியலிங்கத்திடம் கேட்டபோது அவரும் அதனை உறுதிப்படுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment