நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்த்திட்டத்திற்கு அமைய கொழும்பு கோட்டையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கஃபூர் கட்டிடமானது 620 மில்லியன் ரூபா செலவீனத்துடன் புனரமைத்து, அதன் பழமை மாறாத வகையில் வணிக நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளது.
கஃபூர் கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னோடி நகைக்கடை மற்றும் இரத்தின வியாபாரி நூர்தீன் ஹஜியார் அப்துல் கஃபூர் என்பவரால் கட்டப்பட்டது.
ஐந்து மாடி கட்டிடத்தில் 8,250 சதுர அடி பரப்பளவு உள்ளது கஃபூர் கட்டிடம் 2000 ஆம் ஆண்டில் பழங்கால கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒரு ‘பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்’ என்று வர்த்தமானி செய்யப்பட்டது,
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அமைச்சராக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வின் வழிகாட்டலுக்கு அமைய கொழும்பு நகரில் பழைய கட்டிடங்களை புனரமைக்கும் பணிகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ப்படுகின்றன. அந்த வகையில் கொழும்பு கோட்டை கஃபூர் கட்டிடம் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
இக்கட்டத்திற்கான புனரமைப்பு பணிகளை இலங்கை கடற்படை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகமும் முன்னெடுத்து வருகின்றன.
No comments:
Post a Comment