உலகளாவிய ரீதியில் பரவியுள்ள கொவிட்-19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கவும் முதலீடுகளை மேற்கொள்ளவும் பூரண ஒத்துழைப்புகளை கனடா அரசாங்கம் வழங்குமென இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினோன், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சந்திப்பின் போதே கனேடிய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.
“கொவிட்-19 நெருக்கடியால் உலகம் முழுவதும் சுற்றுலாத்துறை பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளது. கொவிட் நெருக்கடியை கையாள இலங்கை எடுத்திருந்த தீர்மானங்கள் மிகவும் வரவேற்கத்தக்கவையாகும்” என்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் அமைச்சரிடம் கூறியுள்ளார்.
“ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை கருத்திற்கொண்டு புதிய சுற்றுலாத்துறை செயற்றிட்டங்கள் மற்றும் மூலோபாயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
விமான நிலையம் திறக்கப்பட்டதும் சுற்றுலாப் பயணிகள் குறித்து கையாளும் விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.
என்றாலும் எதிர்வரும் குளிர்காலத்தில் கொவிட் வைரஸ் பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளமையால் விமான நிலையம் திறக்கப்படுவது தாமதமாகலாம்” என இதன்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கனேடிய உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்திருந்தார்.
சுப்ரமணியம் நிஷாந்தன்
 
 
 

 
.jpg) 
 
 
 
 
No comments:
Post a Comment