விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : பெண் உள்ளிட்ட இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : பெண் உள்ளிட்ட இருவர் கைது

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாசெவன பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின் போது விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது பெண்ணொருவர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இங்கிரிய பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நேற்று புதன்கிழமை பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. 

கைது செய்யப்பட்ட ஆண் அந்த விபச்சார விடுதியின் உரிமையாளர் எனவும் விபச்சார விடுதியை நடத்திச் செல்ல குறித்த பெண் இரகசியமான முறையில் அவருக்கு உதவி ஒத்தாசை புரிந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

வாதுவ மற்றும் பேருவலை பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 24 வயது மதிக்கத்தக்க நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad