வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினொரு கிராம் ஹெரோயினுடன் ஐந்து இளைஞர்கள் கைது - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினொரு கிராம் ஹெரோயினுடன் ஐந்து இளைஞர்கள் கைது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 11 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வெவ்வேறு இடங்களில் 5 பேர் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவில் சட்டவிரோத நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு சட்டவிரோத நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் இருந்து 21 வயது மற்றும் 22 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு செம்மண்ஓடை கிராமத்தில் 15 வயது மற்றும் 26 வயது இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 980 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம். துசிதகுமார தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜி.ஐ. புஸ்பகுமார, எஸ். வாசல, எஸ். பிரேமசிறி, எம். ரவிந்திர ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 11 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும், 5 சந்தேக நபர்களும் கைது செய்து கைது செய்யப்பட்டுள்னர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில், போதைப் பொருள் பாவனையினை இல்லாமல் செய்வதற்காக வாழைச்சேனை பிரதேசத்திற்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.சி.என். ஜயசுந்தர வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஓக்டோபர் 15 ஆம் திகதி வரை போதைப் பொருளுடன் 32 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad