அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய கொழும்பின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் கடைகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர்.
கொழும்பின் சில இடங்களில் இன்று (வியாழக்கிழமை) காலையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பித்ததும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக கொழும்பின் பல பகுதிகளிலுள்ள மக்கள் கடைகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக வதந்திகள் மக்கள் மத்தியில் பரவியதால் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சில பல்பொருள் அங்காடிகளுக்கு முன் பொதுமக்கள் நீண்ட வரிசையிலிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்ய காத்திருப்பதாகவும் அறியவருகிறது.
No comments:
Post a Comment