குளியாப்பிட்டியில் மேலும் 14 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 22, 2020

குளியாப்பிட்டியில் மேலும் 14 பேருக்கு கொரோனா

குளியாப்பிட்டியில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதாக குளியாப்பிட்டிய பிரதான சுகாதார பரிசோதகர் வைத்தியர் உத்பல குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, குளியாப்பிட்டி சுகாதார பரிசோதகர் பிரிவில் இதுவரை 44 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

நேற்று நடத்தப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் மேலும் 14 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக டொக்டர் உத்பல குணசேகர இன்று (வியாழக்கிழமை) காலை தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் குளியாப்பிட்டிய சுகாதார பரிசோதகர் பிரிவில் உள்ள பல இடங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதால், மக்கள் முழுமையாக சுகாதார அறியுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வைரஸ் பரவலை கருத்திற்கொண்டு குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குளியாப்பிட்டிய, நாரம்மல, தும்மலசூரிய மற்றும் பன்னல ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment