கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் இடை நிறுத்தம் - News View

Breaking

Post Top Ad

Monday, October 12, 2020

கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் பொதுமக்கள் சேவைகள் இடை நிறுத்தம்

கடன் இணக்க சபைத் திணைக்களம் மற்றும் அதன் அலுவலகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து பொதுச் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (12) விடுத்துள்ள அறிவித்தலிலேயே, கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் செயலாளர் டி.எஸ். தயானந்த இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றுநோய் காரணமாக குறித்த திணைக்களம் மற்றும் அதன் அலுவலகங்களின் ஊடாக நாட்டின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் முன்னெடுக்கப்படும் சகல பொதுச் சேவைகள் மற்றும் திணைக்கள ஒன்றுகூடல்கள் அனைத்தும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்படுவதாக, அவர் அறிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad