கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, October 12, 2020

கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வேண்டுகோள்

நாட்டில் பதிவாகும் கொவிட்-19 தொற்றுக்குள்ளாவோர் அல்லது தனிமைப்படுத்தப்படுவோர் அல்லது நபர்கள் தொடர்பான செய்திளை வெளியிடும் போது அந்த நபர்களின் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காட்சிகள் ஒளிபரப்படுவது தொடர்ச்சியாக இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் நோயாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் சமூக விரோதிகளாக கருதப்படும் வகையில் சில ஊடகங்களில் தகவல்கள் முன்வைக்கப்படுவதும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இதனால் தொற்றுக்குள்ளாவோர் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்ட நபர்களினதும் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்பாடும் வகையில் ஊடகங்கள் செயற்படக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைத்து ஊடக பிரதானிகளுக்கும் அறிக்கையென்றை விடுத்து அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு

கொவிட்-19 வைரசு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட செய்திகளை வெளியிடும் பொழுது மிகவும் நேர்மறையாகவும் பொறுப்புடனும் ஊடக பயன்பாட்டை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் பதிவாகும் கொவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் அல்லது நபர்கள் தொடர்பாக செய்திகளை வெளியிடும் பொழுது சில இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் இந்த நபர்களின் தனிமைப்படுத்தல் அல்லது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப்படும் முறை, அவர்களது வீடு அல்லது தொடர்புபட்ட சூழல் போன்றவை இந்த நபர்களின் தனியுரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகளை ஒளிபரப்புதல் தொடர்ச்சியாக இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதே போன்று சில சந்தர்ப்பங்களில் நோயாளர்கள் மற்றும் தொடர்புபட்டவர்கள் சமூக எதிரிகளாக கருதப்படும் வகையில் சில ஊடகங்கள் மூலம் விடயங்கள் முன்வைக்கப்படுவதை காண முடிகின்றது.

இவ்வாறான காட்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் பொதுமக்கள் உரிய வகையில் தெளிவுபடுத்தும் பணிகளுக்கு பயனுள்ள பங்களிப்பு கிட்டுவதில்லை என்பதுடன், இவர்களின் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படும் காட்சிகளை சமூகமயப்படுத்தல் இடையுறுகளை ஏற்படும் என்பதுடன் சில நபர்கள் சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தலுக்காக முன் வராத சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். இந்த எதிர்மறை ஊடகப் பயன்பாடு தொடர்பில் தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் பாதகமான மற்றும் எதிர்ப்பு நிலை ஏற்பட்டுள்ளதுடன், இந்த அனர்த்த சந்தர்ப்பத்தில் பொதுமக்களை உரிய வகையில் தெளிவுபடுத்துவதற்காக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் உன்னதமான சமூகப் பணிக்கும் இது பெரும் தடையாக அமைந்துள்ளது.

இதற்கமைவாக இதன் பின்னர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் அல்லது அவர்களின் தொடர்புபட்டவர்களின் தனி உரிமை மற்றும் சமுதாயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காட்சிகளை படம் பிடித்தல் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

விசேடமாக சமூகத்தைப் போன்று இதில் பீடிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களினாலும் வழங்கப்படும் தொடர்ச்சியான செயற்பாட்டு பங்களிப்பை மிகவும் பாராட்டுகின்றோம்.

No comments:

Post a Comment