விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸிடம் விவசாயிகள் கோரிக்கை! - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸிடம் விவசாயிகள் கோரிக்கை!

வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் விவசாயிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரியப்படுத்தியதுடன் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று (வியாழக்கிழமை)வலிகாமம் கிழக்கு விவசாயிகள் கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே இவ்வாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

குறித்த சந்திப்பின்போது உருளைக்கிழங்கு விதைகளை மானிய அடிப்படையில் பெற்றுத் தருமாறும் கோரியதுடன் நீர் இறைக்கும் இயந்திரங்களையும் மானிய அடிப்படையில் பெற்றுத்தருமாறு கேட்டிருந்தனர்.

அத்துடன் யூரியா மற்றும் அமோனிய உள்ளிட் உரங்களை விவசாயிகளுக்கு தேவையான அளவு பெற்றுத் தருமாறும் கோரியதுடன் அம்பன் புயலினால் சேதமடைந்த வாழைப் பயிற் செய்கைக்கான இழப்பிடுகளை வழங்குவதற்கு விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தனர்.

மேலும் யாழ்மாவட்ட சந்தைகளில் விவசாய உற்பத்திகளுக்கு 10Kg இற்கு 1Kg என்ற கழிவு என்ற நடைமுறை காணப்படுவதனால் விவசாயிகளிடையே பெரும் இடர்பாடுகள் ஏற்படுகின்றது. எனவே அது தொடர்பிலும் அவதானம் செலுத்துமாறு கோரிக்கைவிடுத்திருந்தனர்.

குறித்த விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கெட்டறிந்துகொண்ட அமைச்சர் அவை தொடர்பில் உரிய தரப்பினருடன் கதைத்து விரைவில் தீர்வகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்ததுடன் அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்கவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பின்போது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் மற்றும் கட்சியின் வலி கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அகியோர் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment