நீர்கொழும்பு - கொச்சிக்கடை கடலில் நீராடச் சென்று காணாமற் போன இளைஞர்களை தேடும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்றினால், குறித்த கடற்பிராந்தியம் கொந்தளிப்பதாக உள்ளதால் தேடுதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு - கொச்சிக்கடை கடலில் நேற்று (03) மாலை நீராடச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளனர்.
ஹட்டன், மஸ்கெலியா பகுதிகளை சேர்ந்த 2219 மற்றும் 24 வயதான மூன்று இளைஞர்களே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இளைஞர்கள் நீராடச் சென்ற பகுதி அபாயகரமானது என அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவர்கள் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment