கல்வி அமைச்சினால் பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்களை பலப்படுத்த புதிய திட்டம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

கல்வி அமைச்சினால் பாடசாலை சிறுவர் பாதுகாப்புக் குழுக்களை பலப்படுத்த புதிய திட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் பாடசலைகளை மையப்படுத்தி செயற்பட்டு வரும் சிறுவர் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 51 பாடசாலைகளுக்கான நிகழ்வுகள் பிரதேச செயலாளர் என். வில்வரெத்தினம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை 30.09.2020 இடம்பெற்றது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாணவர்களின் மிகழ்ச்சியையும் கவலையையும் தெரியப்படுத்தும் ஹெப்பி அன்ட் சாட் பொக்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பாடசாலைகளில் வைக்கப்படும் முறைப்பாட்டுப் பெட்டிகளினூடாக பெறப்படும் முறைப்பாடுகள் மாணவர்களின் உணர்வு வெளிப்பாடுகளை பொருத்தமான முறையில் கையாள்வதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கிடைக்கலாம் என செயற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.

இந்நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கல்குடா கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் கோட்டக்கல்வி அதிகாரி பிரதேச செயலக அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் சிறுவர்கள் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கொண்டனர்.

No comments:

Post a Comment