போலந்து நாட்டின் ஜனாதிபதிக்கு கொரோனா! - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

போலந்து நாட்டின் ஜனாதிபதிக்கு கொரோனா!

போலந்து நாட்டின் ஜனாதிபதி அன்ட்ரேஜ் டுடாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. எனினும் தாம் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

48 வயதான டுடாவுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை செய்துகொள்ளப்பட்ட சோதனையில் உறுதியானது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகள்/பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு பொதுமக்கள் முதல் உலக நாடுகளின் தலைவர்கள் வரை அனைவரும் இலக்காகி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி, இங்கிலாந்து பிரதமர் உட்பட பல நாடுகளின் தலைவருக்கும் கொரோனா பரவியது.

இந்நிலையில், வைரஸ் பரவிய உலக நாடுகளின் தலைவர்கள் பட்டியலில் தற்போது போலந்து ஜனாதிபதி அன்ட்ரேஜ் டுடாவும் இணைந்துள்ளார். ஜனாதிபதி அன்ட்ரேஜ் டுடாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, ஜனாதிபதி அன்ட்ரேஜ் டுடா மற்றும் அவரது மனைவி அகடா கொர்ஹாசரும் தனிமைப்படுத்திக் கொண்டனர். தனிமைப்படுத்திக் கொண்ட போதும் தான் தற்போது நன்றாகவே இருப்பதாகவும், தொடர்ந்து தனது பணிகளை செய்வதாகவும் ஜனாதிபதி அன்ட்ரேஜ் டுடா தெரிவித்துள்ளார்.

போலந்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதோடு வெள்ளிக்கிழமை அங்கு சாதனை எண்ணிக்கையாக 13,600 க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின.

அந்நாட்டில் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் உணவகங்கள் பகுதி அளவு மூடப்பட்ட நிலையில் தேசிய அளவில் முடக்க நிலை ஒன்றை நெருக்கு சிவப்பு வலயத்தை எட்டியுள்ளது.

அன்ட்ரேஜ் டுடா எஸ்டோனிய தலைநகரில் நிகழ்வொன்றில் பங்கேற்றதோடு கடந்த திங்கட்கிழமை பல்கேரிய நாட்டு ஜனாதிபதி ரூமன் ரடெவ்வை சந்தித்தார். இந்நிலையில் அவர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். அவர் எஸ்டோனிய ஜனாதிபதி கெர்ஸ்டி கெல்ஜுலைட்டை சந்தித்தபோதும் அவருக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

No comments:

Post a Comment