மட்டக்களப்பின் புதிய மாவட்டச் செயலாளராக கருணாகரன் நியமிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

மட்டக்களப்பின் புதிய மாவட்டச் செயலாளராக கருணாகரன் நியமிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

மட்டக்களப்பின் புதிய மாவட்டச் செயலாளராக கே. கருணாகரன் நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

புதனன்று 14.10.2020 பிற்பகல் அதற்கான அமைச்சரவை நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

தற்போது மாவட்டச் செயலாளராக கடமையாற்றும் கலாமதி பத்மராஜா பொது நிர்வாக மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சிற்கு உடனடியாக அமுலாகும் வரையில் இணைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கருணாகரன் தற்போது வரை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவர் என்பதும் இவர் இலங்கை நிருவாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad