பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்பட்ட 5 எம்.பிக்கள் யார்? அநுர குமாரவுக்கு முதலிடம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 3, 2020

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்பட்ட 5 எம்.பிக்கள் யார்? அநுர குமாரவுக்கு முதலிடம்

புதிய பாராளுமன்றத்தின் முதலாவது மாதச் செயற்பாட்டின் அடிப்படையில் முதல் 5 இடங்ளில் உள்ள எம்.பிக்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்துக்குள் நடக்கும் விவாதங்கள், வரவு, உரையாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் எம்.பிக்களின் செயல் திறனை Manthri.lk இணையம் தரப்படுத்துவது வழக்கம்.

இந்த நிலையில், புதிதாக தெரிவான பாராளுமன்றத்தின் முதல் மாத செயற்பாட்டின் அடிப்படையில் எம்.பிக்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த தரப்படுத்தலின்படி, பாராளுமன்றத்தில் முதல் 5 இடங்களில், அநுர குமார திஸநாயக்க, சஜித் பிரேமதாஸ, பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, ஹர்ஷ டி சில்வா ஆகியோர் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment