பி.சி.ஆர். பரிசோதனைகளின் தாமதமே கொரோனாவின் 2ஆவது அலை வீரியமடைய காரணம் - விஜித ஹேரத் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

பி.சி.ஆர். பரிசோதனைகளின் தாமதமே கொரோனாவின் 2ஆவது அலை வீரியமடைய காரணம் - விஜித ஹேரத்

பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமடைந்ததன் காரணத்தினாலேயே, கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டில் வீரியமடைந்துள்ளதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது விஜித ஹேரத் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று நாடு சுகாதார சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது. வைத்திய தேவைக்கான பெரும்பான்மையான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதற்காக கோடிக்கணக்கான நிதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றை தனியார் நிறுவனங்களே இறக்குமதி செய்கின்றன. எனினும், இந்த நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய 1340 கோடி ருபாய் நிதியை அரசாங்கம் இன்னும் வழங்காமல் இருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்க்காலத்திலும் மருத்துவ உபகரணங்களை அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

எனவே, இந்தப் பிரச்சினையை அரசாங்கம் விரைவில் தீர்க்க வேண்டும். அத்தோடு, நாட்டில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் தாமதமாக வெளிவருவதும், கொரோனா பரவலுக்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை இவ்வாறு வீரியமடைவதற்கும், இதுதான் காரணமாகும். இதுதொடர்பாகவும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment