மாலி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் உட்பட 23 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

மாலி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் உட்பட 23 பேர் பலி

மாலி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் உட்பட 23 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் 2012ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் குழுவினருக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல்கள் நடந்துவருகிறது. 

அந்நாட்டின் வடக்கு பகுதியில் பெரும்பாலான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த கிளர்ச்சியாளர்கள் குழு பொதுமக்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் சோகுரா, பாங்காஸ் ஆகிய இரு நகரங்களை குறிவைத்து நேற்று கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த கோர தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 12 பேர், பொதுமக்கள் என மொத்தம் 23 பேர் உயிரிழந்தனர்.

No comments:

Post a Comment