கொவிட்-19 குறித்த எமது ஊழியர் பற்றிய ஊடக அறிக்கை தவறு : ரிச்சட் பீரிஸ் டிஸ்ரிபியூட்டர்ஸ் லிமிட்டட் - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

கொவிட்-19 குறித்த எமது ஊழியர் பற்றிய ஊடக அறிக்கை தவறு : ரிச்சட் பீரிஸ் டிஸ்ரிபியூட்டர்ஸ் லிமிட்டட்

கொவிட்-19 ஆல் தமது ஊழியர் பாதிப்புற்றதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான அறிக்கை தவறென ரிச்சர்ட் பீரிஸ் நிறுவனம் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளது.

பிசிஆர் சோதனையில் குறித்த தொழிலாளிக்கு கொவிட்-19 தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது.

எமது நிறுவன ஊழியர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளியின் நண்பர் என்றும் நெருங்கிய தொடர்பை பேணியதாகவும் இலத்திரனியல், சமூக வலைத்தளங்களில் அறிக்கையிடப்பட்டது.

தவறாக, மிகைப்படுத்தப்பட்டு செய்தி வெளியிட்ட சில இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களின் பதிவுகளை எமது நிறுவனம் மறுப்பதுடன் இதுபோன்ற தவறான தகவல்களால் எமது மதிப்பு மிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி வைரஸ் பரவுதலை எதிர்த்துப் போராட நிறுவனம் கடுமையான உள்ளக நடைமுறைகளைக் கொண்டுள்ளது.

எமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பு தொடர்பில் நாம் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad