19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள சிறந்த விடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என சியம் மகா நிகாயவின் அஸ்கிரிய பீடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், சியம் மகா நிகாயவின் அனுநாயக்கர் நாரம்பனாவே ஆனந்த தேரரை இன்று சந்தித்தபோது தேரர் இந்த விடயத்தைத் தௌிவுபடுத்தினார்.
19 ஆவது திருத்தத்தினால் கடந்த காலத்தில் ஏற்பட்ட பாரிய நெருக்கடி காரணமாக அதில் மாற்றம் இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் உள்ளதாகக் குறிப்பிட்ட நாரம்பனாவே ஆனந்த தேரர், 19 ஆவது திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதி பதிவாளரை சந்திப்பதற்கு முன்னர், சியம் மகா நிகாயவின் அஸ்கிரிய பீட மகாநாயக்கரை சந்தித்தார்.
No comments:
Post a Comment