லங்கா தனியார் மின்சார சபை நிறுவனத்தின் 12 ஊழியர்களுக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Monday, October 12, 2020

லங்கா தனியார் மின்சார சபை நிறுவனத்தின் 12 ஊழியர்களுக்கு கொரோனா

கந்தானை பகுதியில் அமைந்துள்ள லங்கா தனியார் மின்சார சபை நிறுவனத்தின் 12 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் மகள் மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில், அவர் தற்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியரின் மகள் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார். 

இந்நிலையிலேயே அவரது தந்தையான லங்கா தனியார் மின்சார சபை நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய 12 ஊழியர்களுக்கு பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. இதில் அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்பத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad