பிரபல பாதாள உலக குழுத் தலைவரின் நண்பன் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

பிரபல பாதாள உலக குழுத் தலைவரின் நண்பன் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் கைது

(செ.தேன்மொழி) 

வெளிநாட்டிற்கு தப்பி சென்று தலைமறைவாகியுள்ள பிரபல பாதாள உலக குழுத் தலைவரான கேசல்வத்த தினுவின் நெருங்கிய நண்பனான 'ஆந்துருப்பு வீதி அசேன்' என்ற நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாதுக்க - ஐயமுதுகம பகுதியில் இன்று செவ்வாய்கிழமை கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் பாதுக்க மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், இவ்வாறான கடத்தல் நடவடிக்கைக்காக குறித்த ஹெரோயின் போதைப் பொருளை எடுத்தச் சென்று கொண்டிருந்த போதே குற்றப் புலனாய்வு அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

கேசல்வத்த தினுகவினால் திட்டமிடப்படும் போதைப் பொருள் கடத்தலை சந்தேக நபரே செயற்படுத்தி வருவதுடன், குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய மேலும் பல சந்தேக நபர்களை கைது செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment