இலங்கையில் தங்கியிருந்த மடகஸ்கார் பிரஜைகள் இருவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 9, 2020

இலங்கையில் தங்கியிருந்த மடகஸ்கார் பிரஜைகள் இருவர் கைது

வீசா காலாவதியான 13 வெளிநாட்டு பிரஜைகள் கைது - பெண் ஒருவரிடமிருந்து 10,300  சிகரெட்டுகள் மீட்பு - News View
வீசா காலாவதியான நிலையில், இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் மடகஸ்கார் பிரஜைகள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (08) கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேரம் வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி, வீசா இன்றி இந்நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் மடகஸ்காரை சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவரும் அவருடைய 10 வயது மகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபரை இன்று (09) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad