அநுராதபுரம் - புத்தளம் வீதியில் போக்குவரத்து பாதிப்பு, மாற்றுவழி அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் போக்குவரத்து பாதிப்பு, மாற்றுவழி அறிவிப்பு

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் 38ஆவது கட்டைக்கு அருகிலுள்ள பாலம் உடைந்தமையால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கென்டர் வாகனம், குறித்த பாலத்தின் ஊடாக சென்றதை தொடர்ந்து பாலம் உடைந்துள்ளது.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களை, பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணிக்கும் வாகனங்கள், அநுராதபுரம் 02 கட்டைக்கு அருகில் தலாவ பொலிஸ் பிரிவு ஊடாக திரும்பி தம்புத்தேகம வீதியில் நுழைந்து, மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் 27ஆவது சந்தியால் திரும்பி புத்தளம் வீதிக்கு நுழைந்து அநுராதபுரத்திற்கு பயணிக்க முடியும்.

இதேவேளை, புத்தளத்திலிருந்து அநுராதபுரத்திற்கு பயணிக்கும் வாகனங்கள், கலயாய சந்தியின் தெற்கிற்கு வலது பக்கமாக திரும்பி தலாவ நகரிற்கு சென்று அநுராதபுர வீதிக்கு நுழைந்து பயணிக்க முடியும் எனவும், பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad