பிணைமுறி விவாதத்துக்கு அஞ்சியே சபையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளியேற்றம் என்கிறார் செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

பிணைமுறி விவாதத்துக்கு அஞ்சியே சபையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளியேற்றம் என்கிறார் செஹான் சேமசிங்க

மே மாத நடுப்பகுதியில் பொதுத்தேர்தல்: செஹான் சேமசிங்க ~ Jaffna Muslim
பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விவாதத்திற்கு முகம் கொடுக்க பயந்தே எதிர்க்கட்சியினர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுன எம்.பியாக பிரேமலால் ஜயசேகர நேற்றைய தினம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் 09 ஆவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து எதிர்க்கட்சியினர் பெரும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

கறுப்பு சால்வை அணிந்து சபையில் தோன்றிய அவர்கள் பிரேமலால் ஜயசேகரவின் சத்திய பிரமாணம் சட்டபூர்வமற்றது அது அரசியலமைப்புக்கு முரணானதென கோஷம் எழுப்பியதுடன் தமது தோளில் அணிந்திருந்த கறுப்பு சால்வையையும் சபா பீடத்திற்கு மத்தியில் வீசி எறிந்தனர். அதனையடுத்து அவர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதனையடுத்து ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, எதிர்க்கட்சியினரின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம் சம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment