ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கருத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக் கொள்கின்றது - திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, September 19, 2020

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கருத்தை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்றுக் கொள்கின்றது - திஸ்ஸ அத்தநாயக்க

(செ.தேன்மொழி) 

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்திருக்கும் கருத்தை ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இதேவேளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கருத்தையே எதிர்க்கட்சி கூற முற்படவில்லை என்றும், ஆனால் இரு கருத்தும் ஒரே விளக்கத்தையே அளிப்பதாகவும் தெரிவித்தார். 

ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்து தொடர்பில் விளக்கமளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தமட்டில் அதனை நிறைவேற்றக் கூடாது என்ற நிலைப்பாடே காணப்படுகின்றது. இந்த திருத்தத்தில் ஜனநாயக கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் காணப்படுகின்றது என்பதன் காரணமாகவே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம். 

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையும் எம்மை போன்றே 20 ஆவது திருத்தத்தில் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் ஐ.நா வின் கருத்துக்கும் எமது கருத்துக்கும் தொடர்பில்லை என்றாலும், நாங்கள் இருவருமே 20 ஆவது திருத்தம் தொடர்பில் ஒரே கருத்து கணிப்பிலேயே இருக்கின்றோம். 

இதேவேளை எதிர்க்கட்சி என்ற வகையில் நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டே நாங்கள் இவ்வாறு கூறி வருகின்றோம். எமது எண்ணம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு 19 பிளஸ் ஊடாக செல்வதேயாகும். 

அரசாங்க நிர்வாக பதவிகளில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமிப்பது ஆரோக்கிய மற்றது என்று ஐ.நா சபை கூறியிருக்கும் கருத்தை நாங்களும் ஏற்றுக் கொள்கின்றோம். நாங்கள் இராணுவத்தினரையோ, பாதுகாப்பு படையினரையோ குறைவாக மதிப்பிட்டு இவ்வாறு கூறவில்லை. பொதுவாக பொலிஸார் மற்றும் இராணுவ படையினர் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் நலன் தொடர்பில் பாரிய சேவையை செய்து வருபவர்கள். அவர்களின் செயற்பாடுகளுக்கு நாங்கள் எப்போதும் மதிப்பளிக்கின்றோம். ஆனால் அதற்கும் பொது நிர்வாகத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. இதன் காரணமாகவே நாங்கள் பொது நிர்வாக பிரிவுகளில் இராணுவத்தினரின் தலையீடு பொறுத்தமற்றது என்று கூறி வருகின்றோம். 

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவது தொடர்பில் ஆளும் தரப்பு அமைச்சர்கள் கூறி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 

இவ்வாறான பேச்சுகள் இலங்கை போன்ற தனி நாட்டுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாகவே வளர்ந்து வரும் நாடுகள் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும். இலங்கையும் இதுவரையில் அவ்வாறே செயற்பட்டு வந்துள்ளது. அதற்கமைய நாம் பல நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கூட செய்துக் கொண்டுள்ளோம். 

ஐ.நாவுடன் பகைமையை ஏற்படுத்திக் கொள்வது என்பது சர்வதேச நாடுகளுடன் பகைமை ஏற்படுத்திக் கொள்வதற்கு நிகரானதாகும். இந்நிலையில் இலங்கை ஏனைய நாடுகளிடமிருந்து தனித்து செயற்படும் அளவுக்கு இன்னமும் வளர்ச்சி கானவில்லை. அதனால் இது போன்ற தீர்மானங்களை எடுக்கும் போது நாட்டின் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எமது கருத்து.

No comments:

Post a Comment