உலகளாவிய தொழில்நுட்பத்திற்கு சவாலாக இலங்கை இராணுவம் குளிரூட்டப்பட்ட யுனிகோர்னின் நவீனமயமாக்கப்பட்ட யுனிபஃபெல் (Unibuffel) கவச வாகனத்தை தயாரித்துள்ளது.
இதன் மூலம் இலங்கையானது இராணுவ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் ஒரு அடையாளமாக திகழ்கின்றது.
அவசர தேவையின் பிரகாரம், இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் இயந்திரவியல் பொறியியலாலர் படையணியின் படையினரால் தயாரிக்கப்பட்ட ஒன்பது யுனிபஃபெல்ஸ் கவச வாகனங்கள் உட்பட ஒரு புதிய மீட்பு வாகனம் மற்றும் மூன்று கொள்கலன்கள் ஆகியன, மாலியில் உள்ள (மினுஸ்மா) அமைதிகாக்கும் பணியில் உள்ள ஐக்கிய நாடுகள் இலங்கை அமைதிகாக்கும் படையினரின் பயன்பாட்டின் நிமித்தம் கடந்த ஜூன் 26 ஆம் திகதி பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் வரையறுக்கப்பட்ட பென் லைன் ஷிப்பிங் ஏஜென்சிகள் நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
ஒப்படைக்கப்பட்ட ஒரு மீட்பு வாகனம் உள்ளிட்ட ஒன்பது கவச வாகனங்கள் சில நாட்களுக்கு முன்னர் மாலியிலுள்ள மினுஸ்மா தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
அவை விரைவில் மேற்கு ஆபிரிக்க நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களில் சேவை புரியும் ஐக்கி நாடுகள் இலங்கை அமைதிகாக்கும் படையினரின் பயன்பாட்டிற்காக சேவையில் இணைக்கப்படவுள்ளன.
தற்போது லெப்டின்ன் கேணல் நிஹால் கால்லகேவின் கட்டளையின் கீழ் 20 அதிகாரிகள் மற்றும் 223 இராணுவச் சிப்பாய்கள் உட்பட 243 ஐ.நா. இலங்கை அமைதிகாக்கும் படையினர் மாலி அமைதிகாக்கும் படை அமைப்பில் பணியாற்றுகின்றதோடு, 65 வாகனங்களும் சேவையிலுள்ளன.
No comments:
Post a Comment