கடற்படை, விமானப் படையின் நடவடிக்கையை பாராட்டினார் அமெரிக்க தூதுவர் - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

கடற்படை, விமானப் படையின் நடவடிக்கையை பாராட்டினார் அமெரிக்க தூதுவர்

கடற்படை, விமானப் படையின் நடவடிக்கையை பாராட்டினார் அலெய்னா | Virakesari.lk
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவை இன்று சந்தித்தார். 

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது தூதுவர் அலெய்னா, நாட்டிலிருந்து கொவிட் 19 நோய்த் தொற்று நிலைமை பரவுவதை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். 

மேலும், எம்ரீ நியூ டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கு கடற்படை மற்றும் விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் பாராட்டினார். 

மேலும், நாடு கடந்த குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், அதனை தடுத்தல் மற்றும் அதற்கான பயிற்சிகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இக்கலந்துரையாடலில், பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ட்ராவிஸ் கோக்ஸ் மற்றும் பிரதி அரசியல் பிரதானி மார்கஸ் காபென்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment