ரஷிய கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு - News View

Breaking

Post Top Ad

Tuesday, September 22, 2020

ரஷிய கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக குறிப்பாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷியா கடந்த மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி ஒன்றை பதிவுசெய்து கொண்டுள்ளது.

ரஷியாவின் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் 100 கோடிக்கும் அதிகமான டோஸ்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதைப்போல இந்த தடுப்பூசியை அதிக அளவில் தயாரிக்க 5 நாடுகளும் ஒப்பந்தம் போட்டுள்ளன.

இந்த நிலையில் ரஷிய சுகாதார அமைச்சர் மிகெயில் முராஸ்கோவை உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் சந்தித்து பேசினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக குறிப்பாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்காக ரஷியாவுக்கு உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டு தெரிவிக்கிறது. பாதுகாப்பு மற்றும் வலிமையான ஒரு தடுப்பூசியை உருவாக்கியதற்காக ரஷியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad