கண்டி நகர கட்டடங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

கண்டி நகர கட்டடங்கள் தொடர்பில் ஆராய விசேட குழு நியமனம்

கண்டி நகரிலுள்ள கட்டடங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 10 பொறியியலாளர்களை உள்ளடக்கிய வகையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அந்த அறிக்கை இரண்டு வார காலத்துக்குள் தன்னிடம் ஒப்படைக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அடித்தளம் உரிய முறையில் இணைக்கப்படாமையே, கண்டியில் கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கு முக்கிய காரணமாகுமென தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்துடன் நாடு முழுவதும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முறையற்ற விதத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே குறிப்பிட்டுள்ளார்.

கண்டி, பூவெலிகட பகுதியில், ஐந்து மாடிக் கட்டடமொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடிந்து வீழ்ந்ததில் ஒன்றரை மாதக் குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையிலேயே, கண்டி நகரிலுள்ள அனைத்து கட்டடங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment