வசந்தபுரம் வீட்டுத் திட்டங்களிற்கான மீதி பணம் விரைவில் பெற்றுத்தரப்படும் - அமைச்சர் இந்திக்க அநுருத்த - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

வசந்தபுரம் வீட்டுத் திட்டங்களிற்கான மீதி பணம் விரைவில் பெற்றுத்தரப்படும் - அமைச்சர் இந்திக்க அநுருத்த

வசந்தபுரம் வீட்டுத் திட்டங்களிற்கான மீதி பணம் விரைவில் பெற்றுத்தரப்படும் என கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் - பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றையதினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவையும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதனையும் குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா? என்ற பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்த புகைப்படத்தை நேற்றையதினம் பார்வையிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயப்பட்டு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் (14) விஜயம் ஒன்று மேற்கொண்டுடிருந்தார், அவ் விஜயத்தின் போதே குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்தார்.

இராஜாங்க அமைச்சரின் குறித்த விஜயத்தின்போது நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனும் இணைந்து அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு எட்ட வழிவகை செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad