இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க சாரணியம் ஊக்குவிக்கப்படல் வேண்டும், சாரணிய பயிற்சி குற்றங்களைத் தடுக்கும் கவசமாக செயல்படுகிறது - பாதுகாப்பு செயலாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 29, 2020

இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க சாரணியம் ஊக்குவிக்கப்படல் வேண்டும், சாரணிய பயிற்சி குற்றங்களைத் தடுக்கும் கவசமாக செயல்படுகிறது - பாதுகாப்பு செயலாளர்

சாரணியத்தினால் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை உணர்ந்து, இலங்கை சமூகத்தினுள் சாரணியம் உணர்வை ஊக்குவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

"எங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான நாட்டை உறுதி செய்வதில் சாரணியத்தின் வகிபாகம் மிக முக்கியமானது" என போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் இளைஞர்களின் ஈடுபாடு தொடர்பாக குறிப்பிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனை, குற்றச் செயல்கள், பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் இளைஞர்களிடையே வன்முறை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் சாரணியப் பயிற்சி ஒரு தங்க கேடயம் போன்று அமைவதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அடிமையாகும் அச்சுறுத்தலில் இருந்து இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க சாரணீய கோட்பாட்டை ஊக்குவிக்கவும் மேம்படுத்தவும் நாம் அனைவரும் சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என கொழும்பில் இடம்பெற்ற 20வது ஆண்டு இலங்கை ராணி மற்றும் ஜனாதிபதி சாரணர் பொதுக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையின் தலைமை சாரணர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. எனவே, ‘சுபீட்சத்தின் நோக்கு’ குறித்த அவரது பார்வைக்கு அமைய நாம் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வது அத்தியாவசியமானது என அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் இளைய தலைமுறையினரின் சிறந்த எதிர்காலத்திற்காக இந்த தொலைநோக்கு பார்வையினை நாம் அங்கீகரித்து அனுசரணை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அந்தவகையில் ​​"கில்ட் உறுப்பினர்கள் அந்த நோக்கங்களை மிக உயர்ந்த தரத்தில் நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளனர்" என்பதை கடந்த 20 ஆண்டுகளில் கில்ட்டின் செயல்பாடுகளை அவனித்தபோது காணக் கூடியதாக உள்ளதாக மேஜர் ஜெனரல் குணரத்ன தெரிவித்தார்.

ஒருமுறை சாரணியர் பயிற்சி பெற்ற ஒருவர் ஆயுள் முழுவதும் சாரணியராகவே கருதப்படுகிறார். அவர் எந்த வயது பிரிவினராக இருந்தாலும் வயதைப் பொருட்படுத்தாமல் அவர் சமூகம் மற்றும் உலகம் முழுவதையும் கவனித்துக்கொள்கிறார்". என குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர், நாம் எம்மால் முடிந்ததை செய்யும் போது அதுவே எமது சொந்த வாழ்விலும் பிரதிபலிக்கும் என்பது எனது இராணுவ வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடம் ஆகும் என அவர் தெரிவித்தார்.
ஒரு இளம் நபரின் வாழ்க்கையின் முதல் 21 ஆண்டுகளை வயது வந்தோரின் உலகத்திற்கான தயாரிப்பு காலம் என குறிப்பிட்ட பாதுகாப்புச் செயலாளர் : “அவர் இந்த ஆண்டுகளில் வாழ்க்கையில் நீண்ட மற்றும் கடினமான பயிற்சிகளை பெற்று வாழ்க்கையினை எதிர்கொள்ள தயாராகும் ஒரு குடிமகனாக தன்னை நிலை மாற்றிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சாரணர் விருதை வென்ற மைல்கல்லை எட்டியவுடன், ஆக்கபூர்வமான தன்மையை உருவாக்கும் அம்சங்களை வளப்படுத்த நாங்கள் துணைபுரிகிறோம் என அவர் நினைவு கூர்ந்தார்.

இராணுவ முறைமையில் உயர்நிலை அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், உயர் கட்டளையின் நோக்கங்களை அடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட பணிகளை அடைவதன் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளை ஆதரிப்பதே எமது தலையாய கடமையாகும் என குறிப்பிட்டார்.

அனைத்து மட்டங்களின் தலைவர்களாக மிக உயர்ந்த தைரியம், அர்ப்பணிப்பு, அர்ப்பணிப்பு, ஒருமைப்பாடு மற்றும் நேர்மை ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்திய அவர் “இவை ஒரு சாரணரின் வாழ்க்கையின் பண்புகள், மேலும் அறிவு, ஞானம், திறன்கள் மற்றும் முக்கியமாக வாழ்க்கை முறையும் ஒரு சாரணராகக் கற்றுக்கொள்ளும் நோக்கம் கொண்டது " எனவும் தெரிவித்தார்.

கடமை மற்றும் பொறுப்பின் சிறப்பான இந்த குணாதிசயங்கள் தைரியத்துடனும் நேர்மையுடனும் வடிவமைக்கப்பட்டிருந்தன, அவை சாரணர் வாழ்க்கையிலிருந்து நான் சேகரித்த குறிப்பிடத்தக்க படிப்பினைகள் மற்றும் என் வாழ்க்கையில் மூலக்கல்லாக மாறிவிட்டன என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்வில், இலங்கையின் பிரதம சாரணர் ஆணையாளர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் திரு. சந்திர வக்கீஷ்ட, ஜனாதிபதி இலங்கை குயின்ஸ் மற்றும் ஜனாதிபதியின் சாரணர் கில்ட் திரு. திரு. கமல்நாத் ஜினதாச, முன்னாள் பிரதம சாரணர் ஆணையாளர்கள், இலங்கை சாரணிய சங்கத்தின் நிறைவேற்று குழு அதிகாரிகள், மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment